அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றுவது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் பேரவைத் தேர்தலையொட்டி, துங்கர்பூரில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். அப்போது பொதுக்கூட்டத்தில் மோடி பேசிய அவர்,
ஏழைகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கான காங்கிரஸின் நம்பிக்கை எங்கிருந்து முடிவடைகிறதோ அங்கிருந்து மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. காங்கிரஸின் அனைத்து பொய் வாக்குறுதிகளை விடத் தனது உத்தரவாதம் மேலானது.
காங்கிரஸ் அரசின் தவறான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர ராஜஸ்தான் மக்களுக்கு ஜனநாயகம் வாய்ப்பளித்துள்ளது.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் வேகமாகச் செயல்படுத்த ராஜஸ்தானில் காங்கிரசை வெளியேற்றுவது அவசியம்.
ராஜஸ்தானில் ஒவ்வொரு அரசு ஆட்சேர்ப்பிலும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்துள்ளதாகவும், ராஜஸ்தானில் அரசு அதிகாரிகளை காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.