இந்தியா

மலையாள எழுத்தாளர் பி.வல்சலா காலமானார்

மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா மாரடைப்பால் காலமானார்.

DIN

மலையாள எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் முன்னாள் தலைவருமான பி.வல்சலா(85 வயது) மாரடைப்பால் நேற்று (நவம்.21) காலமானார்.

கேரளாவின் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலையாள எழுத்தாளர் பி.வல்சலா திடீர் மாரடைப்பால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உயிரிழந்தார்.

வயநாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்து 1972-ல் வெளியான ‘நெல்லு’ நாவலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

விலாபம், கானல், பாளையம் உள்ளிட்ட பல்வேறு நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

கேரள சாகித்ய அகாதெமி விருது, எழுத்தச்சன் விருது, சி.வி.குன்னிராமன் நினைவு சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். 

பி.வல்சலா சாகித்ய அகாதெமி நிறுவனத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.

இவரது கணவர் அப்புக்குட்டி, மகள் மினி மற்றும் மகன் அருண் ஆகியோருடன் கேரளாவில் வாழ்ந்துவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்கால் மீனவா்கள் மீது ஆந்திர மீனவா்கள் தாக்குதல்: 2 விசைப் படகுகள் சிறைபிடிப்பு

பிக் பாஸ் 9: இரண்டாம் நாளே கைகலப்பு! என்ன நடந்தது?

பாகிஸ்தானில் மீண்டும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 7 பேர் படுகாயம்!

கேஜரிவாலுக்கு அரசு இல்லத்தை ஒதுக்கியது மத்திய அரசு!

விழி பாயும் மனம் பாயும்... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT