பள்ளியில் தோப்புக்கரணம் போடும்போது இறந்த மாணவர்!
பள்ளி வகுப்பு நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்ததால், அம்மாணவர்களை கண்டித்த ஆசிரியர், அதற்கு தண்டனையாக மாணவர்களை தோப்புக்கரணம் போட வலியுறுத்தியுள்ளார்.
ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த ருத்ர நாராயண் என்ற மாணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பள்ளி வளாகத்தில் விளையாடி வந்துள்ளார்.
பள்ளி வகுப்பு நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்ததால், அம்மாணவர்களை கண்டித்த ஆசிரியர், அதற்கு தண்டனையாக மாணவர்களை தோப்புக்கரணம் போட வலியுறுத்தியுள்ளார்.
தோப்புக்கரணம் போடும்போது ருத்ர நாராயண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.