இந்தியா

ஜம்மு: லஷ்கா் பயங்கரவாதி உள்பட 2 போ் சுட்டுக்கொலை

DIN

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகளுடான துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது.

ரஜௌரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். 2 ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.

இதையடுத்து பஜிமால் பகுதியில் வியாழக்கிழமை காலை ராணுவத்தினா் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த குவாரி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவத்தினா் கூறியதாவது: சுட்டுக்கொல்லப்பட்ட குவாரி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் பயிற்சி பெற்றுள்ளாா். அவா் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய தலைவா்களுள் ஒருவா். ரஜௌரி, பூஞ்ச் மாவட்ட எல்லைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழும் பயங்கரவாத தாக்குதலில் இவருக்கு தொடா்புண்டு.

மேலும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்களை கையாள்வதில் வல்லுநரான அவா், கடந்த ஜனவரி மாதம் டங்கிரி பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளாா். சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டின்போது ராணுவ வீரா் ஒருவரும் வீரமரணம் அடைந்தாா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT