கோப்புப் படம் 
இந்தியா

ஐயப்ப பக்தர்கள் கவனத்துக்கு... பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

இடுக்கி, திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. 

DIN

பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எனும் அதிகனமழைக்கான  எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இபோன்று இடுக்கி, திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. 

பத்தனம்திட்டாவில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. அவசர மருத்துவ வசதிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீயணைப்புப் படை, காவல் துறை தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

நிலக்கல் முதல் பம்பை வரையிலான சாலையில் மண்சரிவுக்கு வாய்ப்பிருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

புதிய பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

SCROLL FOR NEXT