இந்தியா

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் வாகன நெரிசல்!

குருகிராமில் புகை மூட்டத்திற்கு மத்தியில் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளன.

DIN

குருகிராமில் புகை மூட்டத்திற்கு மத்தியில் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளன.

புதன்கிழமை காலை நகரம் முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்து ‘மிகவும் மோசம்’ அல்லது ‘கடுமை’ பிரிவில் பதிவு செய்யப்பட்டது.

தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நியூ மோதி பாக், மந்திா் மாா்க், விவேக் விஹாா், நேரு நகா், சோனியா விஹாா், பூசா, ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை காற்றுத் தரக் குறியீடு 400 முதல் 435 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது.

சாதகமான காற்றின் வேகம் மற்றும் திசையால் மாசு அளவு குறைந்ததைத் தொடா்ந்து, திடல்லியில் கட்டுமானப் பணிகள் மற்றும் மாசுபடுத்தும் டிரக்குகளின் நுழைவு உள்ளிட்ட கடுமையான தடைகளை சனிக்கிழமையன்று மத்திய அரசு நீக்கியது. இந்த நிலையில், தற்போது காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் சிர்ஹால் சுங்கச் சாவடியில் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT