ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங். 
இந்தியா

சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு விசாரணை நவ.28ல் ஒத்திவைப்பு!

தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது. 

DIN

தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்கின் ஜாமீன் மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது. 

தில்லி கலால் ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங், ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். 

இந்த ஜாமீன் கோரும் மனு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் பதிவுத் துறையிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இதற்கிடையில், சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 4 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT