மகாராஷ்டிரம் : கோயில் கதவை உடைத்துத் திருட்டு!
நவி மும்பைப் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலின் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
மகாராஷ்டிரம், நவி மும்பையில் உள்ள கான்சொலி பகுதியில் கோயில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். உண்டியலிலிருந்து 10,000 ரூபாய் பணத்தைத் திருடிய அந்த கண்டுபிடிக்கப்படாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை இரவு இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரவு 11 மணி முதல் விடியற்காலை 4.30 மணிக்குள் இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : ராஜஸ்தான் தேர்தல்: அதிகயளவில் மக்கள் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும் - மோடி
Advertisement
Advertisement
திருடர்கள் கோயில் கதவை உடைத்துக்கொண்டு வந்து உண்டியலிலிருந்த 10,000 ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.