இந்தியா

விமானத்திலேயே இந்த கதியா? கலங்கிய பயணி

DIN


புனேவிலிருந்து நாக்பூர் சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவரின் இருக்கைக்கு குஷன் இல்லாமல் வெறும் இருக்கை மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுவரை, விமான நிலையத்தில் உடைமைகள் உடைவது, தொலைவது போன்ற செய்திகள்தான் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக பேருந்துகளில்தான் இருக்கைகள் இருக்காது, இருக்கைகளில் சாய்வு குஷன் இருக்காது, மழை பெய்தால் ஒழுகும் என்று செய்திகள் வெளியாகியிருக்கும்.

ஆனாவ்ல, முதல் முறையாக, ஞாயிறன்று புனேவிலிருந்து நாக்பூர் சென்ற விமானத்தில் 10ஏ என்ற இருக்கையில் பயணம் செய்யவிருந்த சகாரிகா என்ற பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது இருக்கையில் வெறும் பிளாஸ்டிக் பகுதி மட்டுமே இருந்தது. அதில் குஷன் இல்லை. வேறு ஏதேனும் காலி இருக்கை இருந்தால் அதில் அமரும்படி பணிப்பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் காலி இருக்கை இல்லாததால் விமானம் புறப்படும் வரை சகாரிக்கா நின்றுகொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பிறகு மற்ற பயணிகள் குரல் எழுப்ப, உடனடியாக, வேறு இருக்கையிலிருந்து குஷன் கொண்டு வரப்பட்டு, இந்த இருக்கையில் பொருத்தி பயணி அமரவைக்கப்பட்டுள்ளார்.

இதனை தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று அவரது கணவர் சுப்ரத் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT