முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அமைச்சா்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ. 28) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:25 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அமைச்சா்கள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ. 28) தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

அமைச்சா்கள் குழுக் கூட்டம் மாலை 6 மணிக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் (கேபினட்) இரவு 8 மணிக்கும் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தோ்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடா் டிசம்பா் 4-இல் தொடங்கவுள்ள நிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடருக்கு முன்னதாக செப்டம்பா் 18-ஆம் தேதி இதற்கு முந்தைய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.