இந்தியா

மாணவர் தற்கொலை: நீட் தேர்வு அழுத்தம்தான் காரணமா?

DIN

ராஜஸ்தான் கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த 20 வயது மாணவர் திங்கள்கிழமை (நவ.27) தற்கொலை செய்துள்ளார்.

மேற்கு வங்கம், பிர்ஹாம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாரீத் ஹுசைன் ஒரு வருடத்திற்கு மேலாக கோட்டா நகரில் தங்கி படித்து வருகிறார்.

அவர் பயிற்சி பெறுகிற தனியார் கோச்சிங் நிறுவனத்தில் உடன் படிக்கிற மாணவர்களுடன் கடந்த ஜூலை முதல் வாப் நகரில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார்.

திங்கள்கிழமை பிற்பகல்தான் கடைசியாக அவரை நண்பர்கள் பார்த்துள்ளனர்.

இரவு 8 மணி வரை அறையில் இருந்து வெளியே வராததைக் கண்டு  வீட்டின் உரிமையாளர் மூலமாகக் காவலர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

அங்கு விரைந்த காவல் துறையினர் அறை கதவை உடைத்து உள்நுழைந்தபோது மாணவர் தூக்கு மாட்டி இறந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிடைக்காத நிலையில், காரணம் என்னவாக இருக்குமென விசாரித்து வருவதாக அப்பகுதி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களின் தற்கொலை இந்தாண்டில் மட்டும் இது 25-வது முறை.

கடந்த மாதம் செப்.18 அன்று நீட் தேர்வு பயிற்சி பெற்றுவந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பெண், கோட்டா நகரில் தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதுமிருந்து தகுதித் தேர்வுகளுக்குப் பயிற்சி பெறும் மாணவர்களின் தேர்வாக கோட்டா நகரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

SCROLL FOR NEXT