தேர்தல் முடிந்த 3-வது நாளில் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி
ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
1995-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சைச் சேர்ந்த குப்தா, ராஜஸ்தான் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: சுரங்கப்பாதைக்கு வெளியே... இனிப்பு, மாலைகளுடன் குடும்பத்தினர்
ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நவ.25 அன்று நடந்து முடிந்துள்ளது. டிச. 3 வாக்குப்பதிவு எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.