இந்தியா

தாணே: சுவையான உணவு பரிமாறாததால் தாயைக் கொன்ற மகன்

தாணேவில் உணவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தாணேவில் உணவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் 55 வயதுடைய பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை உணவு விவகாரத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சுவையான உணவு பரிமாறவில்லை எனக் கூறி தாயின் கழுத்தில் அவருடைய மகன் அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் சுருண்டு விழுந்த தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே சம்பவத்திற்குப் பிறகு, தாயைக் கொன்ற நபர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT