உ.பி.: பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி கவுன்சிலருக்கு விற்ற மருத்துவர்கள் கைது
உத்திர பிரதேசத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி கவுன்சிலருக்கு விற்ற மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாஉ.பி.: பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி கவுன்சிலருக்கு விற்ற மருத்துவர்கள் கைது
உத்திர பிரதேசத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி கவுன்சிலருக்கு விற்ற மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்திர பிரதேசத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி கவுன்சிலருக்கு விற்ற மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்திர பிரதேச மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜோவ்வா கிராமத்தில் வசித்து வருபவர் ஜெய் ஜெய்ராமின் மனைவி புஷ்பா தேவி. இவர், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின் புஷ்பாதேவிக்கு குழந்தை பிறந்தது.
சுயநினைவு திரும்பியதும் குழந்தை குறித்து கேட்டதற்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தை உயிருடன் இருப்பதாக புஷ்பா தேவி உறுதியாக இருந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று தனது குழந்தையைத் திரும்பத் தரக் கோரி வலியுறுத்தினார்.
மேலும் இதுதொடர்பாக புஷ்பா தேவி ஞாயிற்றுக்கிழமை பச்பேத்வா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், புஷ்பாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அக்ரம் ஜமால், ஹிஃப்சுர் ரஹ்மான் ஆகியோர் பிறந்த குழந்தையை கவுன்சிலர் நிசார் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கவுன்சிலர் நிசார் வீட்டில் இருந்து குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். சம்பவத்துக்குப் பிறகு நேபாளத்துக்குத் தப்பிச் சென்ற கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.