முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

மகளை கழுத்தறுத்துக் கொன்று தீ வைத்து எரித்த கொடூர தந்தை!

குடும்பப் பிரச்னையால் மகளை கழுத்தறுத்துக் கொன்று, உடலை தீ வைத்து எரித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

மகளை கழுத்தறுத்துக் கொன்று தீ வைத்து எரித்த கொடூர தந்தை!

குடும்பப் பிரச்னையால் மகளை கழுத்தறுத்துக் கொன்று, உடலை தீ வைத்து எரித்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் பெற்ற மகளை அவரின் தந்தையே கழுத்தை அறுத்துக்கொன்று, உடலுக்கு தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பாலி பகுதியைச் சேர்ந்தவர் ஷிவ்லால் மேக்வால். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், குடும்பப் பிரச்னையால், கடந்த 12 வருடங்களாக அவர் தனது மனைவி, மகள்களை பிரிந்து பாலி பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய மனைவி மற்றும் மகள்கள் குஜராத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், தன்னுடைய மனைவி மற்றும் மகள் தன்னை தனியாக விட்டுப் பிரிந்து சென்றதற்கு, மூத்த மகள் நிர்மா(32 வயது) தான் முக்கிய காரணம் என்று அவர் கருதியுள்ளார்.  

இந்தநிலையில், ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக நிர்மாவும் அவரது சகோதரியும் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது மேக்வாலை அவர்கள் இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில், அவர்கள் இருவரையும் தன் வீட்டுக்கு வருமாறு மேக்வால் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தன் இளைய மகளை அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு, நிர்மாவை மட்டும் மேக்வால் தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அவரை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற மேக்வால், பெற்ற மகள் என்றும் பாராமல் நிர்மாவின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்ததோடு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி அங்கேயே தீ வைத்து எரித்துக்
கொளுத்தியுள்ளார்.

அதன்பின், தனது இளைய மகளை அழைத்துச் செல்ல சென்ற மேக்வாலின் கையில் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள், உடனடியாக கத்திக்கூச்சல் போட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மேக்வால், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 

இதனிடையே, சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக  காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், மேக்வால் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →