மத்தியப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மூன்று முறை பாஜக ஆட்சி செய்து வருகின்றது. உத்தரப் பிரதேசம் போல் ஹிந்துத்துவா கொள்கையை அதிகம் பின்பற்றும் மக்களை கொண்ட மாநிலமாக ம.பி. உள்ளது.
அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங் கார்கே மற்றும் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சனாதனத்துக்கு எதிராக பேசிய கருத்துகள் ம.பி. தேர்தலில் எதிரொலித்தது. இது வாக்குகளில் எதிரொலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.
கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் ம.பி.யில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஒரே ஆண்டில் எம்எல்ஏக்களின் அணி தாவலால் ஆட்சி பறிபோனது.
இந்த முறை பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நோக்கில், பெண்களுக்கு மாத உதவித் தொகை, இலவச பேருந்து சேவை, இலவச மின்சாரம் போன்ற அடுக்கடுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 102 முதல் 123 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருந்தன. பாஜக 100 இடங்களைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வட இந்தியாவில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் பாஜகவின் நம்பிக்கையை உடைக்க ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களின் வெற்றி காங்கிரஸுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அது அக்கட்சியின் அடுத்தக்கட்ட முன்னேற்றத்துக்கான ஒருபடிகல்லாக அமைந்துவீடும்.
இந்த தேர்தலில் தோல்வியுற்றாலும், மக்களவைத் தேர்தலில் சிறிய பாதிப்புகள் மட்டுமே பாஜகவுக்கு ஏற்படும். ஆனால், காங்கிரஸுக்கு அப்படி அல்ல என்பதால், இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது என்றே சொல்லலாம்.
இந்தியா டுடே
காங்கிரஸ் கட்சி - 111 முதல் 121 இடங்களிலும், பாஜக 106 முதல் 116 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
ஜன் கீ பாத்
காங்கிரஸ் கட்சி 102 முதல் 125 இடங்களிலும், பாஜக 100 முதல் 123 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பாஜக 116 இடங்களிலும், காங்கிரஸ் 111 இடங்களிலும் வெற்றி பெறும் என்று நியூஸ் 18 கருத்துக் கணிப்பு கூறுகிறது.
ரிபப்ளிக் டிவி
பாஜக 118 இடங்கள் முதல் 130 வரையிலும் காங்கிரஸ் 97 - 107 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.