இந்தியா

தெலங்கானா தேர்தல்: 1 மணி நிலவரப்படி 36.68% வாக்குகள் பதிவு!

தெலங்கானாவில்  பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 36.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

DIN

தெலங்கானாவில்  பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 36.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

முதல்வா் சந்திரசேகா் ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் பிஆா்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 36.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐந்து மாநிலத் தேர்தல்களில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கு தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதியாக தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த 5 மாநிலங்களுக்கும் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT