முகப்பு
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

போக்சோ சட்ட வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தானே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 2 அக்டோபர் 2023, 6:52 pm IST
பகிர்:

தானே: போக்சோ சட்ட வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தானே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறப்பு நீதிபதி டி.எஸ்.தேஷ்முக் தனது சமீபத்திய உத்தரவில், ரோஹித்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்தார்.

இந்நிலையில் நவம்பர் 19, 2017 அன்று, ரோஹித் பாதிக்கப்பட்ட பெண்ணை முத்தமிட்ட பிறகு தகாத முறையில் தொட்டார் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் விவேக் வாதிட்டார். இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களுக்காக ரோஹித்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தானே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.