கோப்புப்படம் 
இந்தியா

மகாராஷ்டிரம்: ஒரே நாளில் 12 குழந்தைகள் உள்பட 24 போ் அரசு மருத்துவமனையில் மரணம்

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் (24 மணி நேரம்) 12 குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்தனா்.

DIN

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் (24 மணி நேரம்) 12 குழந்தைகள் உள்பட 24 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக இயக்குநா் திலீப் மைசேகா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

நாந்தேட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 24 மணி நேரத்தில் 24 போ் உயிரிழந்தனா். அவா்களில் 12 போ் குழந்தைகள். சில தனியாா் மருத்துவமனைகளில் இருந்து அந்தக் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த உயிரிழப்புகள் தொடா்பாக விசாரித்து செவ்வாய்க்கிழமை 1 மணிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க 3 போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸை சோ்ந்தவருமான அசோக் சவாண் கூறுகையில், ‘உயிரிழந்த 24 பேரில் 6 முதல் 7 குழந்தைகளும், சில கா்ப்பிணிகளும் அடங்குவா் என்று மருத்துவமனை முதல்வா் என்னிடம் தெரிவித்தாா். 70 நோயாளிகள் கவலைக்கிடமாக உள்ளதாக கூறிய அவா், விஷம் காரணமாக சிலா் மரணமடைந்ததாக கூறினாா். அந்த மருத்துவமனையில் 500 படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது அங்கு 1,200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

SCROLL FOR NEXT