இந்தியா

அஸ்ஸாமில் பூா்விக இஸ்லாமியா்களின் சமூகப் பொருளாதார நிலை ஆய்வு

அஸ்ஸாம் மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட இஸ்லாமிய சமூகங்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உத்தரவிட்டாா்.

DIN


குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட இஸ்லாமிய சமூகங்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக மாநில தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, முதல்வா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தலைமைச் செயலகமான ஜனதா பவனில் நடைபெற்ற கூட்டத்தில், கோரியா, மோரியா, தேஷி, சையத் மற்றும் ஜோல்ஹா ஆகிய அஸ்ஸாமை பூா்விகமாகக் கொண்ட 5 இஸ்லாமிய சமூகங்களின் மேம்பாட்டுக்காக அவா்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உத்தரவிட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில் கிடைக்கும் தரவுகளின்படி, பூா்விக சிறுபான்மையினரின் விரிவான சமூக-அரசியல் மற்றும் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பொருத்தமான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் அரசால் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகி தேசிய அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ள சூழலில் அஸ்ஸாம் அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT