இந்தியா

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே: மத்திய அரசு

ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

DIN


புது தில்லி: ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மின்னணு சிகரெட் எனப்படும் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது.

அந்த சட்டத்தின் அடிப்படையில், இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி - இறக்குமதி, விற்பனை, விநியோகம், இருப்பில் வைத்திருப்பது, இ-சிகரெட் குறித்து விளம்பரம் செய்வது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது ஆனால், அதில் இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்படவில்லை.

இ-சிகரெட் தடை சட்டத்தையும் மீறி, மக்களிடையே அதிக அளவில் புழங்குவதாக வந்த குற்றச்சாட்டைத் தொட்ர்ந்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. மேலும் அந்த சிகரெட் விற்பனையில் ஈடுபடும் 15 இணையதளங்களுக்கும் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.

இதற்கிடையே, இ-சிகரெட்டை எந்த வடிவிலும், எந்த எண்ணிக்கையிலும், எந்த முறையிலும் வைத்திருப்பது இ-சிகரெட் தடை சட்டத்துக்கு எதிரானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, ஒரே ஒரு இ-சிகரெட் வைத்திருப்பதும் குற்றமே என்று மத்திய அரசு உறுதிபடத்தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், இ-சிகரெட் வைத்திருப்பவர்கள் குறித்து புகார் அளிக்க மத்திய அரசு தனியாக இணையதளம் ஒன்றையும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT