இந்தியா

இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?

DIN

இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் குறித்து போர்ப்ஸ் நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 9,45,489 வருவாய் ஈட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.8,000-த்திலிருந்து அதிகபட்ச ஊதியத்தொகையாக ரூ.1,43,000-த்தைக் கணக்கில் கொண்டு சராசரி வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இது ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆண்டு சம்பளத்தைக் கூட்டி அதை மக்கள்தொகையால் வகுத்துப் பிரிப்பதால் இதில் பத்தாயிரம் சம்பாதிப்பவர்கள் முதல் கோடிகளில் சம்பாதிப்பவர்கள் வரை அடக்கம்.  குறிப்பாக, இந்தியாவில் 35 - 44 வயதில் உள்ளவர்களே அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் உள்ளனர். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.13,777 ஆக குறிப்பிட்டுள்ளனர். 

முக்கியமாக, மாநில வாரியான மக்களின் ஆண்டு சராசரி வருவாய் பட்டியலில் ரூ.20,720 தொகையுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தமிழகம் ரூ.19,600 பெற்று 7-வது இடத்தில் உள்ளது. 

நகரங்களின் பட்டியலில் சோலாப்பூர், மும்பை, பெங்களூர், தில்லி, புவனேஷ்வர், ஜோத்பூர், புணே, ஸ்ரீநகர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் முதல் 10 இடத்தைப் பெற்றுள்ளன. சென்னை இதில் இடம்பெறவில்லை.

இந்திய ஆண்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.19,53,055 ஆகவும் பெண்களின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.15,16,296 ஆகவும் இருக்கிறது.

மேலும், சம்பளங்களில் பெரிய பங்களிப்பை செலுத்தி இந்தியாவில் ஐ.டி. துறையே  முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி,  “கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.50 கோடி இந்தியர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருந்து மேலே வந்துவிட்டதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, வருவாய் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே காட்டுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு சராசரி இந்தியரின் ஊதியம் ரூ.4 லட்சத்திலிருந்து 9 ஆண்டுகளில் ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளது என்று வருமான வரிக் கணக்குகளின் எண்ணிக்கை தெரிவிக்கிறது” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT