இந்தியா

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு 6 நாள்கள் விசாரணைக் காவல்!

DIN

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை 6 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது செய்யபட்டார்.

மதுபானக் கொள்கை வழக்கில் இதற்கு முன்பு தினேஷ் அரோராவை அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

அவரிடம் நடத்திய விசாரணையில் இருந்து இதுவரை 200க்கும் அதிகமானோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து  தில்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக நேற்று கைது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங்கிற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை சஞ்சய் சிங் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இன்று (அக். 5) தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரியது. பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அதன் பெயரில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தது. 

அமலாக்கத் துறை கோரிக்கையை ஏற்று  சஞ்சய் சிங்கிற்கு 5 நாள் அமலாக்கத் துறை காவல் விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT