இந்தியா

மணிப்பூரில் அக். 11 வரை மொபைல் இணைய சேவை முடக்கம்!

DIN

மணிப்பூரில் மொபைல் இணையதள சேவைகள் மேலும் 5 நாள்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. 

மணிப்பூரில் மைதேயி - குக்கி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதனால் அங்கு கடந்த சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், போராட்டத்தை மேலும் பெரிதாக்காமல் கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் மொபைல் இணையதள சேவை மட்டும் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மொபைல் இணைய சேவை முடக்கம் மேலும் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பகுதிகளில் இன்னும் அமைதி சூழ்நிலை ஏற்படாததால் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வரை மொபைல் போனில் இணைய சேவை பயன்படுத்தத் தடை நீட்டிக்கப்படுவதாக மணிப்பூர் டிஜிபி தெரிவித்துள்ளார். 

மணிப்பூரில் 9 நாள்களுக்குப் பிறகு நேற்று(வெள்ளிக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT