இந்தியா

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உலக கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷித் கான்!

DIN

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டியில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 5.5 ரிக்டா் அளவு கொண்ட பின்னதிா்வு ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியது.

இந்த நிலநடுக்கத்தில் 320 போ் உயிரிழந்ததாக ஐ.நா. முதலில் தெரிவித்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாகவும், சுமார் 6 கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்   பாதிக்கப்படவர்களுக்கு உதவும் வகையில், உலக கோப்பை போட்டிகளுக்கு தனக்கு கிடைக்கும்  சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார். 

மேலும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வருந்துகிறேன். நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட இருப்பதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT