இந்தியா

காங்கிரஸ் எம்எல்ஏ சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்தார்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ்  சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் பிர்லா ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் உறுப்பினராகி முறையாக ஆளும் பாஜகவில் இணைந்த

DIN


போபால்: இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சச்சின் பிர்லா ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் உறுப்பினராகி முறையாக ஆளும் பாஜகவில் இணைந்தார்.

கர்கோன் மாவட்டத்தில் உள்ள பர்வாஹா தொகுதியின் முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக சச்சின் பிர்லா (40), பாஜகவின் மாநில அலுவலகத்தில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் எம்பி கட்சி பிரிவுத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் உறுப்பினராக சேர்ந்தார்.

2021 அக்டோபரில் சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்தார். ஆனால் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை. 

2018 சட்டப்பேரவைத் தேர்தலில், குர்ஜார் வாக்காளர்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் ஆதரவின் காரணமாக பர்வாஹா தொகுதியில் பிர்லா வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT