இந்தியா

3 வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் மறுப்பு

DIN

3 வழக்குகளில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இதன்படி அமராவதியில் உள்வட்ட சாலை, ஃபைபர் நெட், அங்கல்லூ கலவர வழக்குகளில் அவரின் முன்ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், மாநில குற்றத் தடுப்புப் பிரிவு (சிஐடி) போலீஸாரால் கடந்த மாதம் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் அடைக்கப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவல் ஏற்கெனவே இருமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக வரும் 19-ஆம் தேதி வரை நீட்டித்து, அமராவதியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

முன்னதாக, கடந்த மாதம் 23, 24-ஆம் தேதிகளில் அவரை காவலில் எடுத்து சிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலமைப்பு, இடஒதுக்கீட்டை அழிக்க பாஜக திட்டம்: ராகுல் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்!

ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!

மோடிக்கு விடைகொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்: மல்லிகார்ஜுன கார்கே

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

SCROLL FOR NEXT