சுதாகர் சிங் 
இந்தியா

அதிகாரிகள் முகத்தில் துப்புங்கள்! விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுரை

வேலை செய்யாத அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்புங்கள் என்று விவசாயிகளுக்கு பிகார் முன்னாள் அமைச்சர் சுதாகர் சிங் அறிவுறுத்தியுள்ளார். 

இணையதளச் செய்திப் பிரிவு

வேலை செய்யாத அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்புங்கள் என்று விவசாயிகளுக்கு பிகார் முன்னாள் அமைச்சர் சுதாகர் சிங் அறிவுறுத்தியுள்ளார். 

பிகார் விவசாயத்துறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான சுதாகர் சிங் ஆளும் அரசு கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். 

இவர் கைமூர் மாவட்டத்தில் கிசான் மகாபஞ்சயாத்தில் பேசும்போது, அதிகாரி ஒருவர் தனது வேலையைச் செய்யாவிட்டால் அவரது முகத்தில் எச்சில் துப்ப வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் பேசியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பணிந்தால், மாநில அரசால் ஏன் பணிய முடியாது என்றும் கூறிய அவர், அதிகாரிகளுக்கு பூமாலைகள் அல்லாமல் காலணிகளை மாலையாக அணிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது பேச்சு பிகார் மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பிகாரில் கடந்த 18 ஆண்டுகளாக ஒருவர் மட்டுமே ஆட்சியில் இருப்பதாக முதல்வர் நிதிஷ் குமாரையும் சாடியுள்ளார். 

ஆளும் கூட்டணியில் உள்ள ஒரு எம்எல்ஏ, மாநில அரசை விமரிசித்திருப்பதும் பேசுபொருளாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியக் கோப்பை: கேப்டனாக ரஷீத்கான்.! 5 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆப்கன் அணி!

பொன்னிற தலைமுடியுடன் கேத் மிடில்டன்! புதிய தோற்றம் சொல்வது என்ன?

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்பு!

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

SCROLL FOR NEXT