கோப்புப் படம் 
இந்தியா

ராஜஸ்தான் தேர்தல் தேதி மாற்றம்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 

DIN

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 23 ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அக். 9 ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை மட்டும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. 

நவம்பர் 23 ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23 ஆம் தேதி திருமண நிகழ்வுகள் அதிகம் நடைபெற இருப்பதால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதால் அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேதி மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வேட்புமனு தாக்கல் அக். 30 தொடங்கி நவம்பர் 6 வரை நடைபெறும் என்றும் நவம்பர் 7 ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் நவம்பர் 9, வாக்கு  எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT