இந்தியா

தமிழகத்துக்கு 3,000 கன அடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு!

DIN

தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் அக். 11 அன்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டுக்கு அக். 16 முதல் அக்.30-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. 

அதன்படி தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று (அக். 13) பிற்பகல் நடைபெற்றது.

இதில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்துக்கு வருகிற அக். 30 ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு  ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: தலைவர்கள் வரவேற்பு!

பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றுமொரு பாலியல் புகார்!

SCROLL FOR NEXT