முகப்பு
இந்தியா

திருவனந்தபுரம்: பைக்கின் குறுக்கே காட்டுப்பன்றி பாய்ந்ததில் தம்பதி காயம்

திருவனந்தபுரத்தில் காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி காயமடைந்தனர்.

Updated On : 13 அக்டோபர் 2023, 5:21 pm IST
பகிர்:

திருவனந்தபுரத்தில் காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி காயமடைந்தனர்.

கேரள மாநிலம், ஆம்பூரியைச் சேர்ந்த சாபு ஜோசப் மற்றும் லிஜிமோல் ஆகிய இருவரும் நேற்றிரவு கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டுப்பன்றி ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்ந்தது. 

Advertisement

இந்த சம்பவத்தில் கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ஜோசப்பிற்கு பல எலும்பு முறிவுகளும் அவருடைய மனைவிக்கு காயங்களும் ஏற்பட்டன. 

உடனடியாக காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.