இந்தியா

தொடுபுழாவில் ஸ்பைசஸ் பூங்காவை திறந்து வைத்தார் பினராயி விஜயன்

DIN

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழாவில் ஸ்பைசஸ் பூங்காவை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

பூங்காவை திறந்து வைத்து பினராயி விஜயன் பேசுகையில், மசாலா பொருட்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களின் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் அதிகரிக்கும் என்றார். 

கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் முட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்ட 15.29 ஏக்கர் ஸ்பைசஸ் பூங்காவின் முதல் கட்டமாக ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டது என்று தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ள முதல்வர், கடந்த 2021 அக்டோபரில் தொடங்கிய வளர்ச்சித் திட்டங்கள் ஆகஸ்ட் 2023ல் முடிவு பெற்றது. முதல் கட்டமாக கட்டப்பட்ட அனைத்து தொழில் மனைகளும் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கேரள மாநில மின்சார வாரியம் தனது துணை நிலையத்திலிருந்து ஒரு பிரத்யேக ஃபீடரை ஒதுக்கியுள்ள நிலையில் வடிகால்கள், மழைநீர் சேகரிப்பு வசதி,  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நிர்வாகத் தொகுதி மற்றும் ஏ.டி.எம் ஆகியவை தற்போது பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் கட்டத்திற்கான வளர்ச்சிப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிகாட்டி உதவுங்கள்

பிஞ்சுக் கை வண்ணம்!

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு 50-வது வெற்றி!

ஒளவைக்கு திருக்கோயில்!

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT