கோப்புப்படம் 
இந்தியா

5 மாநில தேர்தல்: காங். வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

DIN

அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த மாதம் 7 முதல் 30-ஆம் தேதி வரையிலான வெவ்வேறு நாள்களில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 3-ஆம் நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 55 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 30 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

முதல்வர் பூபேஷ் பாகேல் படானிலும், துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ அம்பிகாபூரிலும் போட்டியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரிடா் தொடா்பாக புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் அறிவிப்பு

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

ஆஷஸ்: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டார்க்! ஜோ ரூட், கிராவ்லி டக்-அவுட்.. இங்கிலாந்து திணறல்!

கரூரில் கோயில் நில மீட்பு விவகாரம்: ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT