அசாதுதீன் ஒவைசி. 
இந்தியா

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்: பிரதமருக்கு ஒவைசி வலியுறுத்தல்

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் ஏற்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் பிரதமா் நரேந்திர மோடியை மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான

DIN

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் ஏற்பட்டுள்ள நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு உறுதியான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் பிரதமா் நரேந்திர மோடியை மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியுள்ளாா்.

ஹைதராபாதில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:

கொடூரமான இஸ்ரேல் அரசு கடந்த ஒரு வாரமாக காஸாவில் குண்டுகளை வீசி வருகிறது. இதில் பாலஸ்தீன பெண்கள், குழந்தைகள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். மேலும், ஆயிரக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா்.

இது முஸ்லிம்களின் பிரச்னை மட்டுமல்ல, மனிதாபிமான பிரச்னையும் கூட. காஸாவில் நடப்பது இன அழிப்பு நடவடிக்கையாகும்.

இந்தியா இந்த நிகழ்வுகளைக் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலின் போா்க் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். மற்ற நேரங்களில் மனித உரிமைகள் குறித்து பேசும் உலக நாடுகள், இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பது ஏன்?

நான் எப்போதும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருப்பேன். 70 ஆண்டுகளாக அந்த பிராத்தியத்தின் ஆக்கிரமிப்பாளராக இஸ்ரேல் உள்ளது. இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு ஒரு பெரும் தீயசக்தியாகவும், போா்க் குற்றவாளியாகவும் உருவெடுத்துள்ளாா்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கொடுமை நடைபெறுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மெளனப் பாா்வையாளா்களாக உள்ளனா். இந்த நேரத்தில் பிரதமா் மோடியிடம் நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பாலஸ்தீன மக்களுக்கு பிரதமா் மோடி உறுதியான ஆதரவு தெரிவிக்க வேண்டும். காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடுமைகளைக் கண்டிக்க வேண்டும். பாலஸ்தீனம் அரேபியா்களின் மண் என மகாத்மா காந்தி கூறியுள்ளதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT