முகப்பு
இந்தியா

2040-க்குள் நிலவில் மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும்: மோடி

2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
பகிர்:


2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு திட்டங்களின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

அக்டோபர் 21-ம் தேதி காலை 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

இதையடுத்து, இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ககன்யான் திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியது, 

எச்எல்விஎம்3 மூன்று குழுவில்லாத பயணிகள் உள்படத் தோராயமாக 20 முக்கிய சோதனைகள் நடத்தப்படும். 

3 முறை ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2025-ல் இந்தியா தனக்கான பிரத்யேக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கத் திட்டமிட வேண்டும். 

2035-க்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040ல் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதற்கான விண்கலமும் உருவாக்கப்படும். 

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நான்காவது நாடாக இந்தியா உருவாகும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →