முகப்பு
இந்தியா

குழாயடி சண்டையாக மாறிய பாஜக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் என்பதால், பாஜகவின் மகளிரணியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். 

இந்தியா

குழாயடி சண்டையாக மாறிய பாஜக மகளிரணி ஆலோசனைக் கூட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் என்பதால், பாஜகவின் மகளிரணியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:10 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் பாஜக மகளிரணியினர் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாவூன் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் இன்று (அக். 18) நடைபெற்றது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் என்பதால், பாஜகவின் மகளிரணியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். 

இதனிடையே திடீரென பாஜக பெண் தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தலைமுடியை இழுத்து வீதியில் இறங்கி சண்டையிட்ட பெண்களை அங்கிருந்தவர்கள் தடுக்க முற்பட்டனர். இதனை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர். 

அதில், சுற்றியிருந்த ஆண்களும் சண்டையிட்டுக்கொண்டிருந்த பெண்களைத் தாக்குகின்றனர். இந்த விடியோவைக் காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் தங்களின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 

பாஜகவைச் சேர்ந்தவர்கள் தங்களின் அநாகரிகத்தை நாளுக்குநாள் மக்களுக்கு காட்டிக்கொண்டுள்ளனர் என சமாஜவாதி குறிப்பிட்டுள்ளது.

பாஜக தொண்டர்களுக்கு மத்தியிலேயே நிறைய முரண்கள் உள்ளன. பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் முடியைப் பிடுங்கும் போட்டி நடைபெற்றுள்ளது. பாஜகவில் தலைவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →