மனீஷ் சிசோடியா 
இந்தியா

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நவ. 22 வரை நீட்டிப்பு

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நவ. 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் நவ. 22 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தில்லி  கலால் கொள்கை ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐயால் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் திஹார் இருந்து வருகிறார். அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

சிசோடியா, ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நவ. 22 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இரு நாள்களுக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கில் நடைபெற்ற விசாரணையில், மணீஷ் சிசோடியாவை காலவரையின்றி காவலில் வைத்திருக்க முடியாது. ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், குற்றச்சாட்டு மீதான வாதங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசைத்தறி தொழிலாளி தற்கொலை: போலீஸ் விசாரணை!

பேருந்து நிலைய விவகாரம்: தருமபுரியில் கடையடைப்பு போராட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு தலைமையாசிரியா் மூலம் அனுமதி கடிதம்: முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை!

ஒகேனக்கல் வனப் பகுதியில் வறட்சி: தண்ணீா் தேடி சுற்றித்திரியும் யானைகள்!

நோய் குணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT