இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல்: அக். 25-ல் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான இரண்டாவது உயர்நிலைக் குழு கூட்டம் வருகிற அக். 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

DIN

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான இரண்டாவது உயர்நிலைக் குழு கூட்டம் வருகிற அக். 25 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. 

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா, முன்னாள் நிதி ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் கடந்த செப். 23 ஆம் தேதி நடைபெற்றது. 

இதன் தொடர்ச்சியாக 'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான இரண்டாவது உயர்நிலைக் குழு கூட்டம் வருகிற அக். 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் ஆய்வாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை: மாநில மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

தனியாா் நிறுவனத்தில் திருட்டு: தேடப்பட்டவா் கைது

ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

மகளிருக்கான காவல் உதவி செயலி விழிப்புணா்வு

SCROLL FOR NEXT