பொதுமக்களுடன் அமித் ஷா 
இந்தியா

அன்னதான கூடத்தில் உணவருந்திய அமித் ஷா!

குஜராத்தில் தாயின் நினைவாக செயல்படும் அன்னதான கூடத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

DIN

குஜராத்தில் தாயின் நினைவாக செயல்படும் அன்னதான கூடத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

குஜராத் மாநிலம் மன்சா பகுதியில் தனது தாயின் நினைவாக குசும்பென் அன்ன க்ஷேத்ரா என்ற பெயரில் அன்னதான கூடத்தை அமித் ஷா நடத்தி வருகிறார். இந்தக் கூடத்தில் நாள்தோறும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

மூன்று வேளையும் இலவசமாக ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வபோது இந்த அன்னதான கூடத்துக்கு  அமித் ஷா தனது குடும்பத்துடன் வருகைபுரிவது வழக்கம். அந்தவகையில், இன்று அன்னதான கூடத்துக்கு வந்த அமித் ஷா அங்கு வந்த மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

அமித் ஷாவின் தாயார் பெயர் குசும்பென் ஷா. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 2010ஆம் ஆண்டு காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT