இந்தியா

வாக்குக்கு பணம் தருவதாக கூறிய பாஜக அமைச்சர்: வழக்கு பதிந்த தேர்தல் ஆணையம்!

வாக்குக்கு பணம் தருவதாக அறிவித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 

அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே ஆட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச போக்குவரத்து மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக அதிகபட்ச வாக்குகளைப் பெறும் வாக்குச்சாவடிக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சு சமுக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே காங்கிரஸ் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. அதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்தியப் பிரதேச அமைச்சர் கோவிந்த் சிங் ராஜ்புத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலைட்! க்யூட்!! ப்ரெட்டி... ப்ரீத்தி!

காலம் பெற உய்யப் போமின்

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

SCROLL FOR NEXT