கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகா கோர விபத்து: லாரி மீது கார் மோதியதில் 15 பேர் பலி 

கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவி

DIN

சிக்கபல்லாபூர்: கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 5 பேர் பலியாகினர் மற்றும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

கர்நாடகம் மாநிலம் சிக்கபல்லாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பாகேபள்ளியில் இருந்து சிக்கபல்லாபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ கார் சிக்கபல்லாபூர் பகுதியில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 5 பேரும் சிக்கபல்லாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

டாடா சுமோ காரில் இருந்த 13 பேரில் 12 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பனிமூட்டத்தால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பாகேபள்ளி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT