இந்தியா

ஜாமியா மசூதியில் 3-வது வாரமாக தொழுகை ரத்து!

ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதி தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், பாதுகாப்பு காரணமாக ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதி தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஹுரியத் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபரூக் கூறுகையில், 

நௌஹட்டா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதி தொடர்ந்து மூன்றாவது வாரமாக வெள்ளிக்கிழமை தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்கப் பாதுகாப்புப் பணியாளர்கள் அதைத் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளது. 

போரினால் ஒருபோதும் அமைதி கிடைக்காது, அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். மேலும் அவநம்பிக்கை, பாதுகாப்பின்மையை உருவாக்குவதாகவும் அவர் கூறினார். 

ஹமாஸ் படையினர் எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT