இந்தியா

நாளை சந்திரகிரகணம்: எப்போது? எங்கே தெரியும்?

DIN

இந்த மாதத்தின் இறுதியில், நாட்டில் பகுதிநேர சந்திரகிரகணம் நாளை நிகழவிருக்கிறது. நள்ளிரவில் இந்த சந்திரகிரணம் நிகழவிருப்பதால், இது பெரிய அளவில் மக்களிடையே கவனத்தைப் பெறவில்லை.

அக்டோபர் 14ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. ஆனால் அது இந்தியாவில் தெரியவில்லை. ஆனால் நாளை நிகழும் சந்திர கிரகணம் பகுதிநேரமாக இந்தியாவில் தெரியவிருக்கிறது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி நள்ளிரவு 11.31 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகணம் மறுநாள் அதாவது 29ஆம் தேதி அதிகாலை 3.36 மணி வரை நிகழ்கிறது.

இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, வட-கிழக்கு தெற்கு அமெரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக், அன்டார்ட்டிக்கா பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனுக்கும், நிலவுக்கும் இடையில் பூமி பயணிக்கும்போது, பூமியின் நிழலானது நிலவினை மறைப்பதால் இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரகிரகணமானது எப்போதும் பௌர்ணமி நாள்களில்தான் நிகழும். கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றது. 

அடுத்த சந்திரகிரகணமானது 2025ஆம் ஆண்டு மார்ச் 13 - 14ஆம் தேதிகளில் நிகழவிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT