இந்தியா

ராஜஸ்தான்: ஆர்எல்பி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! 

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி(ஆர்எல்பி) 10 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. 

DIN

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி(ஆர்எல்பி) 10 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி, ஆர்எல்பி கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், மக்களவை உறுப்பினருமான ஹனுமன் பெனிவால் கின்வ்சார் தொகுதியில் போட்டியிடுகின்றார். 

போபால்கர் தொகுதியில் எல்எம்ஏ புக்ராஜ் கர்க் மற்றும் மெர்டா எம்எல்ஏ இந்திரா தேவி பாவ்ரி ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவார்கள். 

எம்பியின் சகோதரர் நாராயண பெனிவால், கின்வ்சார் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். ஆனால் கின்வ்சார் தொகுதியில் அவருக்கு சீட்டு வழங்கவில்லை.

இம்மாத தொடக்கத்தில், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 100 இடங்களில் ஆர்எல்பி கடும் போட்டியை எதிர்பார்க்கிறது என்று ஹனுமன் பெனிவால் கூறியுள்ளார். 

ராஜஸ்தானில் நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

SCROLL FOR NEXT