கேரள குண்டுவெடிப்பு: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம்!
கேரளாவின் கிறிஸ்தவ கூட்டரங்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் கிறிஸ்தவ கூட்டரங்கில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “கேரளாவில் மத நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இதையும் படிக்க: தேர்தலில் சீட் வழங்காததால் காங்கிரஸ் தலைவர்கள் பதவி விலகல்!
Advertisement
Advertisement
கொன்று அழிக்கும் மனநிலைக்கு என் மாநிலம் இரையாவதைப் பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபடவேண்டும், வன்முறையால் வன்முறையைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்று அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று சசி தரூர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.