இந்தியா

ம.பி. தேர்தல்: முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் வேட்புமனு தாக்கல்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். 

DIN

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். 

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின்றன. 

இந்நிலையில் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் புத்னி(Budhni) தொகுதியில் போட்டியிட பாஜக மூத்த தலைவரும் தற்போதைய முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர். 

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, சிவராஜ் சிங் சௌகான் நர்மதா நதியில் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT