இந்தியா

வங்காளத்தில் துர்கா பூஜை: அதிகாரிகளுக்கு மம்தா நன்றி!

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார். 

DIN

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார். 

மாநிலத்தில் பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்வதில் அயராது முயற்சிக்கும் அனைத்து காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை பணியாளர்களுக்கும் அவர் வணக்கம் தெரிவித்தார். 

இதுதொடர்பாக பானர்ஜியின் எக்ஸ் பதிவில், 

துர்கா பூஜை அமைதியாகவும் பிரம்மாண்டமாகவும் நடந்தேறியது. கொல்கத்தா காவல்துறை மற்றும் மேற்கு வங்க காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள், பூஜை அமைப்பாளர்களுக்கு சேவை செய்ய 24 மணி நேரமும் அயராது உழைத்ததற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த ஆண்டு அக்டோபர் 20 முதல் 24 வரை நடைபெற்ற இந்த மாபெரும் திருவிழா, யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT