இந்தியா

சத்தீஸ்கர் தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கு 1,219 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 70 தொகுதிகளுக்கு மொத்தம் 1,219 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 70 தொகுதிகளுக்கு மொத்தம் 1,219 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நவம்பர் 7-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்தவதற்கான காலக்கெடு திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கு மொத்தம் 1,219 வேட்பாளர்கள் 1,985 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அவை இன்று பரிசீலிக்கப்படுகின்றது. வேட்புமனுக்களைத் திரும்பப்பெற நவம்பர் 2 கடைசி நாளாகும். 

முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் டிஎஸ் சிங் தியோ, அவர்களது எட்டு அமைச்சரவை அமைச்சர்கள், மாநில அவைத் தலைவர் சரண் தாஸ் மஹந்த் ஆகிய முக்கிய வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மற்ற 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 70 இடங்களில் 17 இடங்கள் எஸ்டி மற்றும் 9 இடங்கள் எஸ்சி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

வைகை அணையில் 69 அடியில் தண்ணீா் நிலைநிறுத்தம்

ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

SCROLL FOR NEXT