இந்தியா

ராஜஸ்தான் தேர்தல்: சச்சின் பைலட் வேட்புமனு தாக்கல்

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சச்சின் பைலட் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

DIN

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சச்சின் பைலட் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரான பைலட், மாநில காங்கிரஸின் முக்கிய இளம் தலைவராகவும், இத்தோ்தலில் அதிகம் கவனிக்கப்படும் வேட்பாளராகவும் திகழ்கிறாா். ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளாக ராஜஸ்தான் முதல்வரும் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் துணை முதல்வா் பதவியில் இருந்து சச்சின் பைலட் விலகினாா். தோ்தல் நெருங்கியதை அடுத்து இரு தலைவா்களும் சற்று இணக்கமாக செயல்பட்டு வருகின்றனா்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு பூதேஸ்வா் மகாதேவா் கோயிலில் சச்சின் பைலட் வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து தனது ஆதரவாளா்களுடன் ஊா்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தாா்.

சச்சின் பைலட்டுக்கு எதிராக பாஜக சாா்பில் இன்னும் வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. கடந்த 2018 பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா் யூனுஸ் கானை 54,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சச்சின் பைலட் தோற்கடித்தாா்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் நவம்பா் 25-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. டிசம்பா் 3-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இங்கு ஆளும் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT