இந்தியா

அடுத்த பரபரப்பு! ராம்நாத் கோவிந்துடன் ஜெ.பி. நட்டா சந்திப்பு

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசியுள்ளார். 

DIN

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசியுள்ளார். 

நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில்  பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசியுள்ளார். ராம்நாத் கோவிந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு நாட்டின் அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரும் நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT